நோக்கு

தாய் நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்திற்காக காணி சீர்திருத்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பௌதிக வளங்களையும் காணிகளையும் பயன்படுத்தும் பொறுப்பை முன்னணி நிறுவனம் என்ற வகையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நிலைமாற்றமாகும்.

செயற்பணி

பயனாளிகளின் பயன்பாட்டுக்காக காணி சீர்திருத்த நடைமுறைகளை அமுலாக்குதல், காணிகளின் மேம்பாட்டுக்காக உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், தனிப்பட்டவர்களின் காணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், பௌதிக வளங்களின் சொத்துவத்தை முகாமைப்படுத்துதல், உரிய நேரத்தில் காணிகளை உச்சவரம்புக்கு மேம்படுத்துவதற்கு வலுவூட்டுதல், நட்டஈடுகளை வழங்குதல், பொருளாதார துறையில் உற்பத்தித்திறன்மிக்க வகையில் முதலீடு செய்தல் மற்றும் காணிகளின் ஒதுக்கத்தைப் பராமரித்தல் என்பவற்றின் ஊடாக தேசிய அபிவிருத்திக்காக செயலூக்கமுள்ள பங்களிப்பை உறுதிப்படுத்துதல்.

1972ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க காணிசீர்திருத்த சட்டத்தின்மூலம் ஸ்தாபிக்கப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972ஆம் ஆண்டுவரை நீடித்துச் செல்லும் வரலாற்றைக் கொண்டுள்ளது. 45 வருடங்களுக்கு மேலாக காணிசீர்திருத்த ஆணைக்குழு காலத்திற்குக் காலம் திருத்தப்படுகின்ற காணிசீர்திருத்த சட்டங்களுக்கு அமைவாகவும் அவ்வப்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற கொள்கைத் தீர்மானங்களுக்கு அமைவாகவும் உருவாக்கப்பட்ட ஏற்பாடுகளின்படி செயலாற்றியுள்ளது. காணி உரிமையாளர்களின் நியதிச்சட்ட கடப்பாடுகளை விடுவித்தல் மற்றும் அவர்களுக்கு நட்டஈடுகளைச் செலுத்துதல், உற்பத்தித் திறனுள்ள முதலீடுகளுக்கு உரிய காணிகளைப் பயன்படுத்துதல் மற்றும் ஆணைக்குழுவின் அரசிறையைச் சேகரித்தல், காணிகளைப் பாதுகாத்தல், பணியாட் தொகுதியினருக்குப் பயிற்சியளித்தல் மற்றும் நலனோம்புகை என்பவை ஆணைக்குழு மிகுந்த முன்னுரிமையளிக்கின்ற பணிகளாகும்.

தற்போதைய இலங்கை அரச பணிச்சட்டகத்தின் வெற்றிக்காக 100 நாள் வேலைத்திட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டதற்கு அமைவாக பொதுமக்களுக்கு ஓர் இலட்சம் காணித்தண்டுகளை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டத்தை முழுமையாக வெற்றியடையச் செய்வதற்கு காணி சீர்திருத்த ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொண்டுள்ளது.

இந்தப் பணிகளை பணியாட் தொகுதியினருக்கு அறியச் செய்வதற்காகவும் அதிகாரிகளிடமிருந்து கரத்துக்களைப் பெற்றுக்கொள்ளுவதற்காகவும்.அத்தகைய ஒவ்வொரு பணிகளுக்கான நிறுவனங்களின் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுக்களை அமைப்பதற்கும் செயலமர்வுகளை நடத்துவதற்கும் ஆணைக்குழு பணிகளை ஆரம்பித்துள்ளது. மேலும் நிறுவனத்தின் பணியாட்தொகுதியினருக்குப் பயிற்சியளிப்பதற்கும் பயற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டன.

அதற்கு மேலதிகமாக, கௌரவ அமைச்சரின் வழிகாட்டலின் கீழும் நெறிப்படுத்தலின் கீழும் நிபுணர்களைக் கொண்ட மதியுரைக் குழுவின் பரிந்துரையின் மீது உற்பத்தித்திறன்மிக்கவைகளாக அடையாளம் காணப்பட்ட காணிகளை முதலீட்டுக்காக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நோக்கங்கள்

  • காணி சம்பந்தப்பட்ட தகவல்களைத் திரட்டுதல்
    • பிரகடனப்படுத்தப்பட்டு ஆனால் இதுவரை அடையாளம் காணப்படாத காணிகளை அடையாளம் காணுதல்
    • பொதுமக்கள் வழங்கும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு காணிசீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை அடையாளம் காணுதல்
    • பயன்படுத்துவதற்குத் தகுதியாகவுள்ள ஏனைய தரப்பினருக்கு உடைமை மாற்றப்பட்ட காணிகள் உடைமை மாற்றப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாவிட்டால் அத்தகைய காணிகளைச் சுவீகரித்தல்
  • காணிசீர்திருத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்ட காணிகள் சம்பந்தமாகப் பின்வரும் நடவடிக்கைகளைச் செயற்படுத்துதல்
    • நியதிச்சட்ட உறுதிப்பாடுகளையும் சட்ட கடப்பாடுகளையும் விடுவித்தல்
    • மேம்படுத்துவதற்கு உச்ச வரம்பில் உள்ள காணிகளை காணிசீர்திருத்த ஆணைக்குழுவுக்குப் பொறுப்பேற்றல்
    • காணிசீர்திருத்த ஆணைக்குழுவினால் பொறப்பேற்கப்படுகின்ற காணிகளுக்கான நட்டஈடுகளைச் செலுத்துதல்
    • பிரகடப்படுத்தப்பட்டு ஆனால் அத்தகைய தேவைகளின் கீழ் வராத காணிகளின் உரிமையாளர்களுக்குத் மீளளித்தல்
  • நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை அடையும் நோக்கில் அரசாங்கத்தினால் உருவாக்கப்படுகின்ற சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு அமைவாக காணிசீர்திருத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள காணிகளை உற்பத்தித்திறன்மிக்க முதலீடுகளில் பயன்படுத்துதல்
  • ஆணைக்குழுவுககுச் சொந்தமான காணிகள் சம்பந்தப்பட்ட அரசிறையைச் சேகரித்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பங்களிப்புச் செய்தல்

செயற்பாடுகள்

  • காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாடுகளின் நியதிகளில் உள்ள தனியாருக்கு உரிமையாகவுள்ள காணிகளின் உச்ச வரம்பை ஒழுங்குமுறைப்படுத்துதல்
  • உச்ச வரையறைக்குள் உள்ள காணிகளை அடையாளம் காணுதல் மற்றும் பொறுப்பேற்றல்
  • சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கு அமைவாக சட்ட கடப்பாடுகளை விடுவித்தல்
  • காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் சம்பந்தப்பட்ட வெளிப்படுத்துனருக்கு நட்டஈடு வழங்குதல்
  • காணி சீர்திருத்த ஆணைக்குழு சுவீகரித்த, ஆனால் காணிசீர்திருத்த ஆணைக்குழு சட்டத்தினால் விலக்களிக்கப்பட்டுள்ள காணிகளின் உடைமையை மீளளிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
  • காணி ஆவணங்களை இற்றைப்படுத்துதல் மற்றும் வெளிக்களத்தில் காணி இணைப்பாக்கம் பற்றிய தகவல்களைச் சேகரித்தல்
    • வெளிப்படுத்தப்பட்டு ஆனால் அடையாளம் காணபப்டாத காணிகள்
    • உயர்வரம்புக்கு வெளிப்படுத்தப்படாத காணிகள்
    • உடைமை மாற்றப்பட்ட ஆனால் உற்பத்தித் திறன்மிக்க முதலீடுகளில் பயன்படுத்தப்படாத காணிகள்
  • நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்குப் பங்களிப்புச்செய்தல்
    • முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களுக்கு காணிகளை வழங்குதல்
    • விவாசாய கருத்திட்டங்களுக்கும் ஏனைய பயிர்ச்செய்கை நடவடிக்கைளுக்கும் காணிகளை வழங்குதல்
    • கைத்தொழில்களுக்கு காணிகளை வழங்குதல்
  • நாட்டின் சமூக அபிவிருத்தியை அடைவதற்குப் பங்களிப்புச்செய்தல்
    • காணியற்ற மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொள்ளுவதற்கு காணிகளை வழங்குதல்
    • அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானங்களுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட கருத்திட்டங்களுக்கு காணிகளை வழங்குதல்
    • மத ஸ்தலங்களுக்கு காணிகளை வழங்குதல்
    • அரச நோக்கங்களுக்காக காணிகளை வழங்குதல்
    • அரசாங்க நிறுவனங்களுக்காக காணிகளை வழங்குதல்
  • அரசிறை சேகரிப்பு கருத்திட்டங்களை அமுலாக்குதல்
    • இயற்கை வளங்கள் மீது அரசிறையை சேகரித்தல்
    • குத்தகை அடிப்படையில் காணிகளை வழங்குதல் மற்றும் குத்தகை வாடகையைச் சேகரித்தல்
    • அரசாங்கம், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் ஏனைய நபர்களிடமிருந்து வருமதியாகவுள்ள பணத்தை அறவிடல்
  • நிறுவனத்தின் நிறவன கட்டமைப்பு மீள் கட்டமைத்தல்
    • வினைத்திறன்மிக்க மற்றும் நன்றாகப் பயிற்சியளிகப்பட்ட பணியாட் தொகுதியினரை உருவாக்குதல்
    • கடமைகளைச் சரியானமுறையில் ஒப்படைத்தல்
    • பன்முகப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் ஊடாக கடமைகளை ஒப்படைத்தல்
    • ஆணைக்குழுவின் பணியாட் தொகுதியினரை கலந்துரையாடல்கள் செயலமர்வுகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றிற்காக நெறிப்படுத்துதல்
  • வினைத்திறனையும், உற்பத்தித்திறனையும் அடைவதற்காக பௌதிக வளங்களையும் ஏனைய தேவையான வசதிகளையும் அளித்தல்

வகிபாகம்

சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின் மூலம் பொறுப்பளிக்கப்பட்டுள்ள வகிபாகத்திற்கு மேலதிகமாக அவ்வப்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற கொள்கைத் தீர்மானங்களுக்குப் பதிலளிப்பதற்கு இந்த வகிபாகம் பரந்த பிரதேசத்திற்கு மேம்படுத்தப்படவிருக்கிறது.

logonew2

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு

+94 113 520 165
+94 112 878 052