காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு வரவேற்கிறோம்
1972ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க காணிசீர்திருத்த சட்டத்தின்மூலம் ஸ்தாபிக்கப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972ஆம் ஆண்டுவரை நீடித்துச் செல்லும் வரலாற்றைக் கொண்டுள்ளது. 45 வருடங்களுக்கு மேலாக காணிசீர்திருத்த ஆணைக்குழு காலத்திற்குக் காலம் திருத்தப்படுகின்ற காணிசீர்திருத்த சட்டங்களுக்கு அமைவாகவும் அவ்வப்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற கொள்கைத் தீர்மானங்களுக்கு அமைவாகவும் உருவாக்கப்பட்ட ஏற்பாடுகளின்படி செயலாற்றியுள்ளது.
காணி உரிமையாளர்களின் நியதிச்சட்ட கடப்பாடுகளை விடுவித்தல் மற்றும் அவர்களுக்கு நட்டஈடுகளைச் செலுத்துதல், உற்பத்தித் திறனுள்ள முதலீடுகளுக்கு உரிய காணிகளைப் பயன்படுத்துதல் மற்றும் ஆணைக்குழுவின் அரசிறையைச் சேகரித்தல், காணிகளைப் பாதுகாத்தல், பணியாட் தொகுதியினருக்குப் பயிற்சியளித்தல் மற்றும் நலனோம்புகை என்பவை ஆணைக்குழு மிகுந்த முன்னுரிமையளிக்கின்ற பணிகளாகும்.